பருப்பு சேமியா பாயாசம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்து நன்கு கழுவிய பின் குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்து சேர்த்து 1/4டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து எடுத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 3
வடிகட்டிய வெல்ல கரைசலுடன் வேக வைத்து எடுத்து பருப்பை ஊற்றி கலந்து விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் சேமியா சேர்த்து வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுக்கவும்.
- 4
இதில் காய்ச்சிய பால் ஊற்றி கலந்து விட்டு வேக வைத்து எடுத்த சேமியாவை சேர்த்து கலந்து விடவும்.
- 5
தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி பாதாம், முந்திரி துண்டுகளை சிறிதாக நறுக்கியது, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.
- 6
இதில் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து எடுத்து பாயாசத்தில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
சூப்பரான பருப்பு மற்றும் சேமியா சேர்த்து வித்தியாசமான சுவையில் பருப்பு சேமியா பாயாசம் தயார். நன்றி
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட் (2)