வாழைப்பூ கூட்டு
வயிறு பிரச்சனைகளை சரி செய்ய வல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவில் நரம்பு எடுத்து சுத்தம் செய்யவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணி ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் போடவும்.
- 2
இரண்டு ஸ்பூன் தயிர் ஊற்றி, வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி ஊறவைக்கவும். ஏன்னா அது கருக்காமல் இருக்கும். குக்கரில் பாசிப் பருப்பு போடவும்.
- 3
பாசிப் பருப்பை நன்றாகக் கழுவி எடுத்துக்கொண்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.
- 4
மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் பருப்பை குக்கரில் 2 விசில் வைத்து வேகவிடவும். கரண்டியால் பருப்பை மசித்து பொடியாக நறுக்கிய வாழைப்பூவை அதில் சேர்க்கவும்.
- 5
உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தூள் போட்டு குக்கரில் ஒரு விசில் வைக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- 6
கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 7
அதோடு வெங்காயம் சேர்த்து, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
- 8
பின் வேக வைத்து இறக்கிய வாழைப்பூவை அதில் சேர்த்து கொதித்ததும் தேங்காய்ப்பூ தூவி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட்