ஒரே மாம்பழத்தில் மேங்கோ ஜூஸ் மற்றும் மேங்கோ டெஸட்

#vattaram
Week 8
கிருஷ்ணகிரி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது மாம்பழங்கள் தான் அந்த அளவிற்கு அங்கு மாம்பழங்கள் மிகவும் பிரபலம் மாம்பழங்களில் ஆன பல வகை ஜுஸ்களும் பல வகை இனிப்பு வகைகளும் அங்கு ஏராளமாக கிடைக்கும்
ஒரே மாம்பழத்தில் மேங்கோ ஜூஸ் மற்றும் மேங்கோ டெஸட்
#vattaram
Week 8
கிருஷ்ணகிரி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது மாம்பழங்கள் தான் அந்த அளவிற்கு அங்கு மாம்பழங்கள் மிகவும் பிரபலம் மாம்பழங்களில் ஆன பல வகை ஜுஸ்களும் பல வகை இனிப்பு வகைகளும் அங்கு ஏராளமாக கிடைக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் சர்க்கரை சேர்த்து அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரைந்து நன்றாக பாகு ஆகும் வரை கொதிக்கவிட வேண்டும்
- 2
நன்றாக பழுத்த ஒரு மாம்பழத்தை தண்ணீரில் அலசி விட்டு அதன் தோலை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
தோல் நீக்கிய மாம்பழத் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
அரைத்து வைத்துள்ள கலவையை சர்க்கரைப் பாகுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வரை நன்றாக கலக்கி விட்டு கொதிக்க விட வேண்டும் (இந்த சமயத்தில் அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளுங்கள்)
- 5
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து ஜூஸ் ஆறியவுடன் அதனை ஒரு வடிதட்டை வைத்து நன்றாக வடிகட்டி கொள்ள வேண்டும்
- 6
ஒரு ஸ்பூன் கொண்டு வடிதட்டின் மேல் வைத்து கிளறிவிட்டு நன்றாக ஜூஸை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 7
இதோ மிகவும் ருசியான மாம்பழ ஜூஸ் தயார் இதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தும் குளிர்பானமாகவும் பருகலாம்
- 8
அடுத்து நாம் வடிதட்டில் இருக்கும் மீதமான மாம்பழக் கலவையை வீணாக்காமல் ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் கால் டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கொள்ளலாம்
- 9
அதனை நன்றாக கலந்து விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பாதாம் பிஸ்தா இவைகளை மேலே தூவலாம்
- 10
இப்பொழுது இதனையும் அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளலாம்
- 11
இதோ மிகவும் ருசியான மாம்பழ டெஸட் தயார்...வாங்க ருசிக்கலாம்
Keywords
Similar Recipes
More Recipes






























கமெண்ட்