கடை பஜ்ஜி மாவு சுவையில் மாவு தயாரிக்கும் முறை &வாழைக்காய் பஜ்ஜி
சமையல் குறிப்புகள்
- 1
பஜ்ஜி சுவையாக வர முதலில் தரமான கடலை மாவு வாங்கவும். கடலை மாவு, அரிசிமாவு. காஷ்மீரி மிளகாய் தூள், பூண்டு பவுடர், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக எடுத்து சல்லடையில் சலித்து கொள்ளவும். (1கப் கடலை மாவிற்கு 1/4கப் அரிசி மாவு என்ற விகிதத்தில் எடுத்து கொள்ளவும்.)
- 2
(பூண்டு பவுடரை வீட்டில் தயாரிக்க பூண்டை தோல் உரித்து எடுத்து கொண்டு அதை மிக்சி ஜாரில் போட்டு 1முறை 2விநாடி ஓட விட்டு அதாவது பூண்டு அரைப்பட கூடாது ஒன்று இரண்டாக உடைய வேண்டும். பின் அதனை தொடர்ந்து 4நாட்கள் வெயிலில் காய வைக்கவும். அவ்வாறு காய வைத்தால் பூண்டு நன்கு காய்ந்து ப்ரவுன் கலரில் மொறு மொறுப்பாக மாறி விடும். அதனை மீண்டும் ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்து காற்று புகாத டப்பாவில் வைக்கவும்)
- 3
இந்த பூண்டு பவுடரை பஜ்ஜி, சிக்கன் பிரை, கபாப் ஆகியவற்றில் சேர்க்கலாம் ) சலித்து எடுத்த மாவில் 1டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெயை சேர்த்து கிளறவும். இவ்வாறு சேர்ப்பதால் பஜ்ஜி அதிகம் எண்ணெய் குடிக்காது.
- 4
பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும். கரைத்த பஜ்ஜி மாவு அதிக திக்காகவோ, அல்லது அதிக தண்ணீராகவோ இல்லாமல் படத்தில் உள்ளவாறு கரைக்கவும்.
- 5
பின்னர் நீள வாக்கில் மெலிதாக நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை மாவில் இருபுறமும் தொட்டு சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.
- 6
சோடா சேர்க்காமல் சுவையான மொறுமொறுப்பான வாழ்க்கைக்காய் பஜ்ஜி கடையில் வாங்கும் பஜ்ஜி மாவின் அதே சுவையில் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட் (5)