🥭 Mango Donuts 🍩

#3M
மாம்பழ டோனட்ஸ் ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகள் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி....
🥭 Mango Donuts 🍩
#3M
மாம்பழ டோனட்ஸ் ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகள் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மேங்கோ டோனட்டூ செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்.
- 2
மாம்பழத்தை தோல் சீவி அதை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும் வைக்கவும்.
- 3
ஈஸ்ட் ஆக்டிவேட் செய்ய ஒரு கப்பில் ஈஸ்ட், சர்க்கரை மற்றும் வெதுவெதுப்பான 3 ஸ்பூன் பால் சேர்த்து அதை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
- 4
இப்பொழுது ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி விட்டது.
- 5
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சக்கரை, உருக்கிய வெண்ணெய், உப்பு, பால்,அரைத்த மாம்பழம் 7 ஸ்பூன், ஆக்டிவேட் செய்த ஈஸ்ட்,சேர்த்து மாவு பிசைந்து 45 நிமிடங்கள் ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.
- 6
நாம் ஊற வைத்த மாவு இரு மடங்காகி விடும் அதை மறுபடியும் பிசைந்து சப்பாத்தி கல்லில் வைத்து 1/4 இன்ச் கன அளவிற்கு தேய்த்து டோனட் வடிவத்திற்கு எடுத்துக் கொள்ளவும்..
- 7
எடுத்து வைத்த டோனட் மேல் ஒரு பட்டர் ஷீட் போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும்.
- 8
இப்பொழுது நாம் டோனட் மேல் போடும் மாம்பழ சாஸ் செய்யலாம்... அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 5 ஸ்பூன் சர்க்கரை மற்றும் மீதமுள்ள மாம்பழ விழுது களையும் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்கு கிளறி அது ஒரு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை விட்டு இறக்கி ஆற வைக்கவும்.
- 9
பட்டர் சீட்டை எடுத்து விட்டு நாம் மூடிவைத்த டோனட்டை பார்த்தால் இருமடங்காக உப்பி
இருக்கும் அதை மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்து எடுக்கவும். - 10
டோனட் இருபுறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
- 11
டோனட்ஸ் தயாராகிவிட்டது. டோனட்டை நாம் செய்த மேங்கோ சாஸில் டிப் செய்து எடுத்து வைக்கவும்.
- 12
பிறகு அதன் மேல் செய்ய அழகுபடுத்த கலர் ஜேம்ஸ், செர்ரி பழம், மற்றும் சாக்லெட் சாஸ் வைத்து நமக்கு தேவையான சுவையில் சாப்பிடலாம்..... அருமையான டோனட்ஸ் ரெடி...,😋
Keywords
Similar Recipes
More Recipes




































கமெண்ட்