சிக்கன் மஞ்சூரியன்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளவும் வெங்காயம் வதங்கிய பின் நறுக்கிய குடைமிளகாய் சேர்க்கவும்
- 2
பிறகு ஒரு ஸ்பூன் சில்லி சாஸ், ஒரு ஸ்பூன் சோயா சாஸ், 2 ஸ்பூன் டொமேட்டோ கெட்சப் சேர்க்கவும்
- 3
1 ஸ்பூன் வினிகர் சேர்த்துக் கொள்ளவும் ஒரு டம்ளரில் 1 ஸ்பூன் சோள மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 4
இரண்டையும் நன்கு கலக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளவும்
- 5
சிக்கனை ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும் அதில் ஒரு முட்டையை உடைத்து பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- 6
1/2 ஸ்பூன் மிளகுத்தூள், 2 ஸ்பூன் சோள மாவு, 2 ஸ்பூன் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கலந்து ஊற வைக்கவும் பிறகு கடாயில் எண்ணெயை ஊற்றவும்
- 8
எண்ணெய் கொதித்த பின் ஊறவைத்த சிக்கனை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 9
வறுத்த சிக்கனையும் கடாயில் சேர்த்துக் கொள்ளவும் பிறகு நன்கு கிளறவும்
- 10
கடைசியாக தேவையான அளவு உப்பு, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
- 11
சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி......
Keywords
Similar Recipes
More Recipes



































கமெண்ட்