சமையல் குறிப்புகள்
- 1
கோழிக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்க்கவும்
- 2
மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சீரகம், மிளகு சேர்த்து பொரியவிடவும்
- 4
பிறகு முந்திரிப்பருப்பு, இஞ்சித் துண்டு, பூண்டு பல் சேர்த்து அடுப்பை குறைத்து வைத்து நன்கு வதக்கவும்
- 5
பிறகு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சிவக்க வரும் வரை மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கிளறி விட்டு வறுக்கவும்
- 6
வறுத்ததை நன்கு ஆற விட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கெட்டியாக நைஸாக அரைத்தெடுக்கவும்
- 7
மற்றொரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, சோம்பு, நட்சத்திர பூ, கல்பாசி பூ, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
பிறகு பொடியாக அரிந்த தக்காளியை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கி விடவும்
- 9
இப்போது பிசறி வைத்த கோழிக் கறியை சேர்த்து 2 நிமிடங்கள் குறைந்த தணலிலேயே வதக்கவும்
- 10
ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி கோழிக்கு மட்டும் தேவையான உப்பு சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைத்து, தட்டு கொண்டு மூடி, 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்
- 11
15 நிமிடங்கள் கழித்து திறந்தால் சிக்கன் முக்கால் பதம் வெந்து இருக்கும். இப்போது வறுத்தரைத்த தேங்காய் மசாலா விழுதை சேர்க்கவும்
- 12
இப்போது குழம்புக்கு தேவையான உப்பு சேர்த்து மீண்டும் 1கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை குறைவான தணலில் பத்து நிமிடங்கள் தட்டு கொண்டு மூடி வைக்கவும்
- 13
பத்து நிமிடங்கள் பிறகு திறந்தால் நன்கு எண்ணெய் பிரிந்து, கோழி வெந்து, ருசியான கோழிக்குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
-
-
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecookingரஜித
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்