கரூர் ஸ்பெஷல் காளான்
சமையல் குறிப்புகள்
- 1
பொரிப்பதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் முட்டைக்கோசை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து மைதா மாவு கார்ன் ஃப்ளார்
- 3
மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து
- 4
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
- 5
பிறகு ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து எண்ணெய் சூடானதும் கலந்து வைத்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக தட்டி சேர்த்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும் பொரித்த மசாலாவை சிறு சிறு துண்டுகளாக பிரித்து வைத்துக் கொள்ளவும்
- 6
பிறகு மசாலாவிற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும் 2 தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 7
பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 8
வெங்காயம் வதங்கிய பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய் தூள் கரம் மசாலா
- 9
மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து
- 10
வதக்கவும் பிறகு கலந்து வைத்த கார்ன்ஃப்ளார் கலவையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்
- 11
பிறகு பொரித்து வைத்த காளானை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
- 12
சுவையான கரூர் ஸ்பெஷல் காளான் தயார்
Keywords
Similar Recipes
More Recipes

































கமெண்ட் (2)