ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா

#colours1
சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1
சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க
சமையல் குறிப்புகள்
- 1
100 கிராம் வெள்ளை சுண்டலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி விட்டு பிறகு 8 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவேண்டும் பிறகு அதனை குக்கரில் வைத்து சுண்டலுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 விசில் வரை விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்
- 2
அடுத்து ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும் அதனுடன் நான்கு பல் பூண்டு மற்றும் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்
- 3
வதங்கிய பிறகு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் அரை டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் சேர்க்க வேண்டும்
- 4
அடுத்து அதில் அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்
- 5
அடுத்து அதில் இரண்டு தக்காளிகளை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு எல்லாம் நன்றாக வதங்கும் வரை வதக்க வேண்டும் நாம் சிறிது நேரம் மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளலாம்
- 6
எல்லாம் வதங்கிய பிறகு நாம் அவற்றை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளலாம்
- 7
அடுத்து வேறு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் அதில் ஒரு பட்டை 3 கிராம்பு 2 பச்சை மிளகாய் 1 டீ ஸ்பூன் சீரகம் அதனுடன் ஒரு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விட வேண்டும் பொரிந்ததும் அதில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட் சேர்க்கவேண்டும்
- 8
அடுத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மேத்தி இலைகளை சேர்த்து பிறகு நாம் வேக வைத்து எடுத்துள்ள சுண்டலையும் (வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து) மசாலா கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம்(தேவைப்பட்டால் உப்பும் சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்)
- 9
எல்லாவற்றையும் ஒருமுறை கலந்து விட்டு 5 நிமிடம் வரை வேக விடலாம் பிறகு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றை சேர்த்துக் கொள்ளலாம்... இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லி இலையை தூவி விட்டு ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம்
- 10
இதோ மிகவும் ருசியான சத்தான ஹோட்டல் சுவையில் சன்னா மசாலா தயார்
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட்