அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா

#colours1
இப்போது அரபு நாட்டு மந்தி பிரியாணி நம் நாட்டிலும் செய்து ருசிக்கலாம். அற்புதமான சுவையில் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய மந்தி பிரியாணியை நீங்கள் முயற்சித்து பாருங்கள்.
அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா
#colours1
இப்போது அரபு நாட்டு மந்தி பிரியாணி நம் நாட்டிலும் செய்து ருசிக்கலாம். அற்புதமான சுவையில் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய மந்தி பிரியாணியை நீங்கள் முயற்சித்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
குங்குமப்பூவை சூடான தண்ணீரில் ஊற வைக்கவும். காய்ந்த எலுமிச்சையை உடைத்து உள்ளிருக்கும் விதைகளை எடுத்து விடவும். ஒரு பேனை சூடு செய்து இதில் குறிப்பிட்டுள்ள பிரியாணி மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி ஆற விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
சிக்கல் பெரிய துண்டுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஆழமாக கட் செய்து கொள்ளவும். சிக்கன் ஊறவைக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு கடாயில் 1.5 லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதன் மேல் அரிசி சல்லடையை வைத்து சூடாக்கவும். இதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை வைத்து மூடி போட்டு 30 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். மறக்காமல் 15 நிமிடம் கழித்து சிக்கனை திருப்பி போட்டு வேகவிடவும். அடுப்பை அணைத்த பின் கடாயில் இருக்கக்கூடிய சிக்கன் ஸ்டாக் ஐ சேமித்து வைக்கவும் அரிசி வேக வைக்க உபயோகித்துக் கொள்ளலாம்.
- 4
ஒரு பானில் 2 மேஜைக்கரண்டி வெண்ணெயை சேர்த்து சூடானதும் ஆவியில் வெந்த சிக்கன் துண்டுகளை பரவலாக வைத்து கிரில் செய்யவும். நெருப்பை அதிகமாக வைத்து சமைக்கவும். மறுபக்கம் திருப்பி போட்டு கிரில் அச்சு விழும் வரை சமைத்து அடுப்பை அணைக்கவும். மூன்று முதல் ஐந்து நிமிடத்தில் கிரில் செய்துவிடலாம்.
- 5
இப்பொழுது பிரியாணி செய்வதற்காக அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும். இதில் பிரியாணி இலை, பட்டை,கிராம்பு, ஏலக்காய், காய்ந்த எலுமிச்சை சேர்த்து தாளிக்கவும். பூண்டைத் தட்டி சேர்த்து வதக்கவும். கூடவே பச்சை மிளகாய் விழுது, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளி மற்றும் பிரியாணி மசாலா சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு அரை மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியை தண்ணீர் வடித்து இதில் சேர்த்து 2 நிமிடம் கலக்கவும்.
- 6
பிறகு குறிப்பிட்டுள்ள சிக்கன் ஸ்டாக் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் அரிசியை வேக வைக்கவும். அரிசி மற்றும் தண்ணீர் சமநிலையில் வரும் பொழுது இரும்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து தம்முக்கு வைக்கவும். மூடி போட்டு குறைவான தீயில் 5 நிமிடம் தம் விடவும்.
- 7
பிறகு இதன் மேல் ரெடி செய்த சிக்கன் துண்டுகளை பரவலாக வைத்து நடுவில் ஒரு கிண்ணத்தில் எரிந்த கறியை வைத்து இதில் கொஞ்சம் நெய் விட்டு மூடி போட்டு மேலும் 5 நிமிடம் சிறு தீயில் தம்முக்கு விடவும். அடுப்பை அணைத்து விடவும். பரிமாறும் முன் சிக்கன் துண்டுகளை முதலில் ஒரு தட்டிற்கு மாற்றி வைக்கவும் பிறகு பிரியாணி பரிமாறி அதன் மேல் சிக்கன் வைக்கலாம். அதற்குமேல் எண்ணெய் அல்லது நெய்யில் முந்திரி மற்றும் பாதாமை வருத்து இதன் மேல் தூவவும்.
- 8
மந்தி பிரியாணிக்கு பொருத்தமான சட்னி தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து பல்ஸ் மோடில் நறநறவென்று அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சையை பிழிந்து கொள்ளவும்.
- 9
மிகவும் சுவையான இந்த மந்தி பிரியாணி காரம் குறைவாகவும், மசாலா வாசனையுடன் புதுவித ருசியாக இருக்கும். இதோடு சாப்பிடக்கூடிய மந்தி சட்னி புளிப்பு தன்மையோடு பிரியாணிக்கு பொருத்தமாக இருக்கும். நீங்களும் மறக்காமல் முயற்சித்துப் பாருங்கள்.
Similar Recipes
-
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)
#magazine4வித்தியாசமான முறையில், செய்யப்பட்ட மட்டன் வெள்ளை பிரியாணி.. அருமையான மணமும் ருசியும் கொண்டது.. Kanaga Hema😊 -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி- ஆம்பூர் சிக்கன் பிரியாணி
இந்த செய்முறை மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய பிரியாணி ஒன்று .ஆம்பூர் பிரியாணி என்பது பாஸ்மதி அரிசியில் செய்யக்கூடியது இது குக்கரில் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம். விருந்தினர்களுக்கு அவசர வேளைகளில் எளிமையான பிரியாணிதான் குக்கர் பிரியாணி ஆம்பூர் பிரியாணி என்று பெயர் பாஸ்மதி அரிசியில் கலந்து செய்து பாய் வீட்டு கல்யாணத்தில் எப்படி செய்வார்களோ அது போன்று செய்யக் கூடியவை தான் ஆம்பூர் பிரியாணி என்பது.sivaranjani
-
-
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
116.முகலாய சிக்கன் பிரியாணி
செய்முறையைப் பாருங்கள், நீங்கள் ஒரு முயற்சி செய்தால், எனக்கு தெரியப்படுத்துங்கள் :) சந்தோஷமாக Beula Pandian Thomas -
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
-
-
பிரியாணி சுவையில் சேமியா (Semiya biryani recipe in tamil)
#i love cooking.# பிரியாணி சுவையில் சேமியா.அவசரத்திற்கு எளிமையாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாகும் சேமியா. Sangaraeswari Sangaran -
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
ரைஸ் குக்கரில் சுவையான சிக்கன் தம் பிரியாணி (Delicious Chicken Dum Biryani in Rice Cooker)
இனி சப்பாத்தி மாவு பிசைய தேவையில்லை. நாவின் சுவை அரும்புகளை தூண்டும் ருசியான தம் பிரியாணி. இலகுவான முறையில் ரைஸ் குக்கரில் செய்யலாம். நீங்களும் செய்து பாருங்கள்.#myfirstrecipe#goldenapron3 Fma Ash -
சீமைத்தினை சிக்கன் பிரியாணி (Thinai chicken biryani recipe in tamil)
சீமைத்தினை சத்து மிகுந்தது. அரிசியையே தவிர்க்க வேண்டியவர்களுக்கு வித்தியாசமான, சுவையான சிக்கன் பிரியாணி .#ASKani
-
சென்னை சிக்கன் பிரியாணி
#vattaramமிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய குறைவான மசாலா பொருட்கள் பயன்படுத்தி சுவையான சென்னை சிக்கன் பிரியாணி! Mammas Samayal -
-
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
ஹைதராபாத் எக் பிரியாணி
#CF8ஹைதராபாத் பிரியாணி அனைவருக்கும் பிடித்தது. இந்த எக் பிரியாணியை நாமும் செய்து அசத்துவோம். punitha ravikumar -
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
More Recipes
கமெண்ட்