கத்திரிக்காய் காரக்குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும் புளிக்கரைசலில் மல்லி தூள் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
- 2
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும் கத்திரிக்காயை காம்பை வெட்டி விட்டு கத்திரிக்காயின் பின்புறம் நான்கு பாகங்களாக கீறி விட்டு (பூச்சி இருக்கா என்று பார்க்கவும்) தண்ணீரில் போட்டு வைக்கவும்
- 3
அடுப்பில் கடாயை வைத்து 2 குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி சோம்பு வெந்தயம் கருவேப்பிலை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்
- 4
தக்காளியை போட்டு வதக்கவும் பிறகு கத்தரிக்காயை போட்டு எண்ணெய் கழிவு வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து கத்தரிக்காயை எல்லா புறமும் திருப்பி திருப்பி விட்டு வேகவிடவும்.
- 5
கத்திரிக்காய் வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும் ஒரு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும் எண்ணெய் பிரிந்து குழம்பு கெட்டி பட்டுவிடும் கத்தரிக்காய் கார குழம்பு ரெடி
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்