மசால் தோசை

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#vattaram Week10 #Dosa

மசால் தோசை

#vattaram Week10 #Dosa

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
4 பேர்
  1. அரை கிலோ தோசை மாவு
  2. 4உருளைக்கிழங்கு
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 2ஆர்க்கு கருவேப்பிலை
  6. 2கொத்து கொத்தமல்லி
  7. அரை டீஸ்பூன் கடுகு
  8. அரை டீஸ்பூன் சீரகம்
  9. ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு
  10. 2 டேபிள்ஸ்பூன் சமையல் எண்ணெய்
  11. 5 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய்
  12. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியை சூடாக்கி சமையல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து, கடுகு பொரிந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து வறுத்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.

  3. 3

    பிறகு மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு ஒரு கப் நீர் விட்டு அதிக தீயில் வேக விடவும். நீர் வற்றியவுடன் நறுக்கிய கொத்தமல்லியை தூவி ஸ்டவ்வில் இருந்து இறக்கவும். தோசைக்கு மசாலா ரெடி.

  4. 4

    பிறகு தோசைக்கல்லை சூடாக்கி தோசை மாவை ஊற்றி மெல்லிதாக தேய்க்கவும். பிறகு தோசை மேல் ஒன்றரை டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய்யை சுற்றி விடவும். தோசை சிவந்தவுடன் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கலாம் அல்லது திருப்பிப் போடாமல் மூடியிட்டு நன்கு மொறுமொறுப்பாக தோசை வெந்தவுடன் எடுத்து அதன்மேல் 2 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பி மடித்து பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes