பட்டர் கார்லிக் நான்
சமையல் குறிப்புகள்
- 1
2 கப் மைதா மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும் அதில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
- 2
பிறகு ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அதோடு ஒரு ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
ஈஸ்ட்டை ஊறவிடவும் பின் ஊறவைத்த ஈஸ்ட்டை எடுத்து மாவுடன் சேர்த்துக் கொள்ளவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 4
மாவை நன்கு பிசைந்து கொள்ளவும் அதை ஒரு மணி நேரம் ஊற விடவும் ஊற வைத்த பின் மறுபடியும் நன்கு பிசைந்து கொள்ளவும்
- 5
மாவை உருண்டையாக உருட்டி மைதா மாவில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்
- 6
பிறகு அதை நீளமாக தேய்த்து தோசைக்கல்லில் போட வேண்டும்
- 7
வெண்ணையில் 2 பூண்டுப் பல்லை சீவி போடவும்
- 8
பிறகு அத்துடன் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அதனை நான் மேல்புறத்தில் தடவி கொள்ளவும்
- 9
இருபுறமும் நன்கு புரட்டி வேகவிடவும்
- 10
சுவையான பட்டர் நான் ரெடி.....
Keywords
Similar Recipes
More Recipes
































கமெண்ட்