சுவையான வெள்ளை வண்ண தேங்காய் சட்னி🥥

#colours3 அனைவரும் விரும்பும் இரும்புச்சத்தை அதிகம் கொண்ட வெள்ளை வண்ண தேங்காய் சட்னி செய்ய முதலில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், உப்பு, அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு ,கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் போட்டு தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்ற சுவையான தேங்காய் சட்னி ரெடி 👌👌👌👌

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பின் தேங்காய்,
பொட்டுக்கடலை,
பச்சைமிளகாய், பூண்டு,வெங்காயம், உப்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். - 3
இனி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். பின் தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். பின் உளுத்தம் பருப்பு போடவும்.
- 4
பின் அதனுடன் கடலைப் பருப்பு,கறிவேப்பிலை,வரமிளகாய், ஒன்று போட்டு இறக்கவும்.
- 5
பின் தாளித்ததை தேங்காய் சட்னியுடன் சேர்த்து கலந்து விடவும். நமது சுவையான அனைவரும் விரும்பும் வெள்ளை வண்ண தேங்காய் சட்னி தயார் 👍இட்லி, தோசைக்கு சாம்பாருடன் தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷன்👌👌👌👌 வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍 நன்றி😊
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்