"கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு"(Cuddalore Famous Fish Gravy)

"கடலூர் பேமஸ் கொடுவா மீன் குழம்பு"(Cuddalore Famous Fish Gravy)
சமையல் குறிப்புகள்
- 1
கடலூர் பேமஸ் மீன் குழம்பிற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்...
1சொலை புளியை சிறிதளவு சுடு தண்ணீரில் 10நிமிடம் ஊரவைத்துக் கொள்ளவும்.பிறகு புளியை மசித்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
மறுதடவை அதே புளியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மசித்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்...
- 2
வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு சிறிதளவு கரிவடகம்,கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
நீளமாக நறுக்கிய 5பற்கள் பூண்டு,இரண்டாக உடைத்த 1பச்சை மிளகாயை போடவும்.
நீளமாக நறுக்கிய 1/2 பெரிய பல்லாரி வெங்காயத்தை போட்டு பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
பொடியாக நறுக்கிய 2தக்காளியை போட்டு சிறிது நேரம் நன்றாக வதக்கவும்.
- 3
1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கொத்துமல்லி தூள்,சீரகம் தூள் &1/4டீஸ்பூன் மிளகு தூள்,தேவையான அளவு உப்பு தூள் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
வடிகட்டி வைத்த புளி தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
- 4
அடுத்து 2பீஸ் மீன் துண்டுகளை போடவும்.சிறிது நேரம் கழித்து முன்னும் பின்னும் திருப்பி போட்டு இரக்கவும்.
"கடலூர் பேமஸ் மீன் குழம்பு" தயார்....
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்