"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு"(Coconut Milk Fish Gravy)
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு செய்ய தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.
1/2கப் தேங்காய் விழுதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.தேங்காய் பால் தயார்...
1எலுமிச்சை அளவு புளியை தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி 10நிமிடம் ஊரவைக்கவும்.பிறகு அதை நன்றாக மசித்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- 2
18சின்ன வெங்காயம்,3தக்காளியை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்று அரைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு சிறிதளவு கரிவடகம்,கரிவேப்பிலை,உரலில் தட்டிய 7பற்கள் பூண்டு இவை அனைத்தையும் போட்டு தாளிக்கவும்.
2டீஸ்பூன் பெருஞ்சீரகம் தூள் போடவும்,பொடியாக நறுக்கிய 1/2பெரிய வெங்காயத்தை போடவும்.பொன் நிறமாகும் வரை நன்றாக வதக்கவும்...
பொடியாக நறுக்கிய 1தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
- 4
1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,சீரகம் தூள்,மிளகாய் தூள் & 2டீஸ்பூன் கொத்துமல்லி தூள் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
தேவையான அளவு உப்பு தூள் போடவும்..
அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி பேஸ்ட் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்...
- 5
வடிகட்டி வைத்த புளி தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
1/2கப் தேங்காய் விழுதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து வைத்த தேங்காய் பால்-ஐ வடிகட்டிக் கொள்ளவும்.
சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்...
- 6
100கிராம்(2பீஸ்)-மீன் துண்டுகளை போடவும்.முன்னும் பின்னும் சிறிது நேரம் திருப்பி போட்டு மீன் வெந்த பிறகு இரக்கவும்...
"தேங்காய் பால் கொடுவா மீன் குழம்பு தயார்"....
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட்