வாழைக்காய் துருவல் பொடிமாஸ்
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை மூன்று துண்டுகளாக கட் பண்ணி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேகவைக்கவும்
- 2
சிறிது நேரம் கழித்து கரண்டியை வைத்து வாழைக்காயை திருப்பி விடவும்
- 3
வாழைக்காயை முழுவதுமாக வேக விடாமல் அரைவேக்காடு வெந்தவுடன் எடுத்துக் கொள்ளவும் அதை ஆறியபின் தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பிறகு அந்த வாழைக்காயை காய் சீவும் கட்ட ரில் வைத்து பொடியாக சீவி எடுத்துக் கொள்ளவும் வெங்காயம் பச்சை மிளகா யை நறுக்கி எடுத்துக் கொள்ளவும் கருவேப்பிள்ளை சேர்த்துக் கொள்ளவும்
- 5
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும் அதனுடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்
- 6
பொன்னிறமாக வந்தவுடன் சீவிய வாழைக்காயை சேர்க்கவும் அதனுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 7
அதை ஒரு நிமிடம் நன்றாக கிளறிய உடன் தேங்காய்த் துருவலை சேர்த்து பூண்டு பல்லையும் தட்டி சேர்த்துக் கொள்ளவும்
- 8
அதை நன்றாக கிளறி எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது வாழைக்காய் துருவல் பொடிமாஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்