முளைகட்டிய கார சுண்டல்
#cakeworkorange இது குழந்தைகளுக்கு சத்தான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு சுண்டல் எடுத்துக்கொண்டு முதல் நாள் நள்ளிரவில் சுண்டலை தண்ணீரில் ஊற வைக்கவும்.மறுநாள் தண்ணீரை வடிகட்டி ஒரு வெள்ளை துணியில் கட்டி வைக்கவும். அதை மூன்று, நான்கு தடவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளிக்கவும். பின் மறுநாள் காலையில் முளை கட்டி இருக்கும். அதை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து தண்ணி ஊற்றி 4 விசில் வைக்கவும். விசில் அடங்கியதும் ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும். அதில் கருவேப்பிலை போடவும்.
- 3
அதோடு 2 பச்சை மிளகாய் ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து கொள்ளவும்.
- 4
நன்றாக வதக்கி முளைக்கட்டிய கருப்பு சுண்டல் சேர்த்து வதக்கவும். பின் அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும். சுவையான முளைக்கட்டிய கார சுண்டல் ரெடி.🌷🌷🌷
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்