கடலூர் ஸ்பெஷல் இறால் தொக்கு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தடவி வைத்துக் கொள்ள வேண்டும், இன்னொரு கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்,
- 2
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இறாலை அதனுடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும், என்பது குழம்பு மிளகாய் தூளையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 4
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி கொதிக்க விட வேண்டும், தண்ணி கொஞ்சம் சுண்டியதும் மறுபடியும் தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி இறாலை வேக வைத்துக் கொள்ள வேண்டும்,
- 5
தண்ணீர் முற்றிலுமாக சுண்டி இறால் நன்கு தொக்கு பதத்திற்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும், சிறிதளவு கொத்தமல்லி தூவி பரிமாறவும், சுவையான இறால் தொக்கு தயார்
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட்