ஹோம் மேட் பாதாம்கீர் / Badam kheer reciep in tamil

#milk பாதாம் இருதயத்துக்கு நல்லது
ஹோம் மேட் பாதாம்கீர் / Badam kheer reciep in tamil
#milk பாதாம் இருதயத்துக்கு நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
பாதாம் பருப்பை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது 20 நிமிடம் சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்
- 2
பிறகு அதை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு வேகமாக ஓட விடாமல் மெதுமெதுவாக ஓடவிட்டு ரவை போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் பால் நன்றாகக் கொதி வந்ததும் கரண்டியை வைத்து அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 4
பால் கொதிக்கும்போது ஓரங்களில் எல்லாம் பாலாடை ஒட்டிக் கொள்ளாமல் பாலுடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொண்டே இருக்கவும் பத்து நிமிடம் பால் நன்றாக கொதித்த உடன் அரைத்த பாதாம் பருப்பை சேர்க்கவும்
- 5
மறுபடியும் அதை நன்றாக கலக்கிக் கொண்டே இருக்கவும் 10 நிமிடம் கொதித்தவுடன் சர்க்கரையை சேர்க்கவும்
- 6
அதையும் நன்றாக கலந்து விட்டு ஏலக்காயை பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும் பிறகு கலருக்காக குங்குமப்பூ அல்லது மஞ்சள் தூள் தண்ணீரில் கரைத்து இரண்டு அல்லது மூன்று சொட்டு சேர்த்துக் கொள்ளவும்
- 7
அதை நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும் இப்பொழுது பாதாம்பால் தயார்.
- 8
இதை குடிக்க தேவையான அளவு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது பாதாம் கீர் தயார்
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்