பாகற்காய் தொக்கு/ bittergourd thokku recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகன்ற வாணலியை சூடாக்கி எண்ணை விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
வெங்காயம் கண்ணாடி போல ஆனவுடன் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய பாகற்காயை சேர்த்து நன்கு துவள வதக்கவும்.
- 3
பிறகு மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு அரை கப் நீர் விட்டு மூடியிட்டு மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும்.
- 4
பாகற்காய் நன்கு துவள வெந்தவுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான பாகற்காய் தொக்கு தயார். இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes







கமெண்ட் (2)