காளான் சூப் / mushroom soup Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடாக்கி வெண்ணையை ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்பு பொடியாக நறுக்கிய காளானை சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பிறகு 5 கப் நீர் விட்டு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் மிளகு பொடி, சீரகப் பொடி சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
- 3
பின்பு சோள மாவை கால் கப் நீரில் கரைத்து ஊற்றவும். இப்போது சூப் சற்று கெட்டியாக இருக்கும். மேலும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு ஸ்டவில் இருந்து இறக்கவும்.
- 4
எலுமிச்சை பழச்சாறு பத்து அல்லது பதினைந்து சொட்டுகள் சூப்பில் சேர்க்கவும். தேவைப்பட்டால் காரத்திற்கு மேலும் மிளகுப் பொடி தூவிக் கொள்ளலாம். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி, சிப்ஸ் அல்லது மிளகு அப்பளத்துடன் சுவையான காளான் சூப்பை பரிமாறவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15354795









கமெண்ட் (4)