சோயா கோலா
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அளவுகளில் 2 வெங்காயம் எடுத்துக் கொண்டு சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
- 2
அளவுகள் சரியாக எடுத்துக் கொள்ளவும் சோயாவை 2 மணிநேரம் ஊறவைத்து அதை தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
பொரிகடலையை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்
- 4
மிக்ஸிஜாரில் 150 கி ஊறவைத்து தண்ணீரை பிழிந்து எடுத்த சோயாவைச் சேர்த்துக் கொள்ளவும் பின் 1 தேங்காய்ச்சில் 1 ஸ்பூன் சோம்புச் சேர்த்துக் கொள்ளவும்
- 5
பிறகு ஒருப் பட்டை 4 பூண்டு 1 inch இஞ்சிச் சேர்த்துக் கொள்ளவும்
- 6
பின்பு 2 பச்சை மிளகாய், கைப்பிடி அளவு மல்லி இலை, ஒருக் கொத்து கருவேப்பிள்ளைச் சேர்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு 2 வெங்காயம் 1/4 மஞ்சள்த்தூள், 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு என்று அடுத்தடுத்துச் சேர்த்துக் கொள்ளவும்
- 8
பின் தண்ணீர்ச் சேர்க்காமல் அனைத்தையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும் அதில் 3 ஸ்பூன் பொரிகடலை மற்றும் அடித்து வைத்த 1முட்டையில் அரை முட்டையை ஊற்றிக் கொள்ளவும்
- 9
அனைத்தையும்ச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும் பின் உருண்டைகளாக உருட்டி வைக்கவும் பின் பொறிக்க தேவையான எண்ணெயில் இட்டு பொறித்தெடுக்கவும் சுவையான கோலா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes





























கமெண்ட் (2)