சமையல் குறிப்புகள்
- 1
தல கறியை முதலில் மூன்று தாடி நன்கு கழுவி பிறகு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி வைக்கவும். அடுத்தது கடாயில் முழு தனியா, சீரகம், சோம்பு, பட்டை கிராம்பு,வரமிளகாய், கருவேப்பிலை, முழு மிளகு,மற்றும் அரிசி சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். வாசனை வந்தபின், வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிடவும். பிறகு அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி துண்டு சேர்த்து வதக்கவும்.
- 2
அடுத்தது மிக்ஸி ஜாரில் வருத்ததை மற்றும் அதில் சிறிதளவு தேங்காய் சேர்த்து முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். பிறகு வதக்கி வைத்த வெங்காயத்தையும் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அடுத்தது பிரஷர் குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு தல கறியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து குக்கரை மூடி 8 -10 விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு தாளிப்பு கரண்டியில், கடலை எண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். தாளித்த தலைக்கறி குழம்பில் சேர்க்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
- 4
மட்டன் மூளை மசாலா செய்ய :
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, பொடியாக கட் பண்ண சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். இதில் சிறிது அளவு நறுக்கிய கொத்தமல்லி இலை. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து இறக்கினால் மட்டன் மூளை மசாலா தயார். - 5
ஆட்டுத் தலைக்கறி குழம்பு தயார். இதனை பரோட்டா, தோசை, சப்பாத்தி, சூடான சாதம், இட்லி மற்றும் பூரி சாப்பிட நன்றாக இருக்கும்.
Similar Recipes
More Recipes

















கமெண்ட் (4)
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊