சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து வைக்கவும் பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 2
சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவும் பின் பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்
- 3
பின் வெங்காயம் பூண்டை சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் வதங்கியதும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பின் புளியை கரைத்து திக்காக வடிகட்டி கொள்ளவும் பின் வெங்காயத்துடன் புளியை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 6
மெல்லிய தீயில் வைத்து 15 நிமிடங்கள் வரை எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கொதிக்க விடவும் பின் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் வெல்லம் சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறி இறக்கவும்
- 8
சுவையான ஆரோக்கியமான சின்ன வெங்காய புளிக்குழம்பு ரெடி
Similar Recipes
More Recipes




























கமெண்ட்