பட்டர் பீன்ஸ் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா எல்லாவற்றையும் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.
- 3
அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை கிராம்பு சோம்பு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- 4
வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும். பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலாத்தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 5
பிறகு பட்டர் பீன்ஸ்சும் உருளைக்கிழங்கையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அரைத்த தேங்காய் விழுதை ஊற்றவும்.
- 6
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி 2 விசில் விட்டு அடுப்பை நிறுத்தவும். பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
- 7
சுவையான பட்டர் பீன்ஸ் கிரேவி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட்