வெஜிடபிள் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய். கொத்தமல்லி புதினா பீன்ஸ் கேரட் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு குக்கரில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் சேர்த்து பிறகு சோம்பு தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.அரிசியை 10 நிமிடம் முன்பு ஊறவைத்து கொள்ளவும்
- 3
பிறகு நன்கு வதங்கியதும் அரிசி 1 கப் என்றால் தண்ணீர் 2 கப் அந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து சிறிது தயிர் கரம் மசாலா தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் கொதி வந்ததும் அரிசியை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 4
பிறகு தண்ணீர் குறைந்தவுடன் குக்கரை மூடி விடவும் விசில் தேவை இல்லை.15 நிமிடம் அப்படியே சிம்மில் வைத்து கொள்ளவும் பிறகு திருப்பி போட்டு 10 நிமிடம் அப்படியே சிம்மில் வைத்து கொள்ளவும்
- 5
பிறகு இறக்கவும் சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் பிரியாணி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்