சிக்கன் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.எடுத்து வைத்துள்ள சிக்கனை கழுவி சுத்தம் செய்து விட்டு அதில் சிறிதளவு உப்பு மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைத்து கொள்ளவும். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அலசிவிட்டு 20 நிமிடங்கள் ஊற வைத்துபின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும் 2 டீஸ்பூன் நெய் 2 டீஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் எடுத்து வைத்துள்ள பட்டை வகைகளை சேர்த்து பொரியவிடவும்.
- 2
பின்னர் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளி 2 டீஸ்பூன் தயிர் எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை சிக்கனை நன்றாக வேக விடவும். தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
நன்றாக ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து உப்பு சரிபார்த்து தேவையெனில் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கிளறிய பின்பு சிறிதளவு கொத்தமல்லி இலை புதினா தூவி மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும். விசில் ஆறியவுடன் மூடியை திறந்து மெதுவாக நன்றாக கிளறி விடவும்.
- 4
தேவையெனில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும். இப்பொழுது சுவையான சிக்கன் பிரியாணி தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்