கார தோசை
magazine 6#nutrition
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி, துவரம் பருப்பு,உளுத்தம் பருப்பு, மூன்றும் நன்கு கழுவி தேவையான நீர் விட்டு 3 மணி நேரம் ஊறவிடவும். பெரிய வெங்காயம் நறுக்கவும்.வர மிளகாய்.தேங்காய் துருவல்.வெங்காயம், சீரகம் மிளகு, உப்பு மஞ்சள்தூள் பெருங்காயம் கறிவேப்பிலை மல்லித்தழை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
- 2
கிரைண்டரில் ஊற வைத்த அரிசி பருப்பு அரைக்கவும். மிக்ஸி ஜாரில் அரைத்த தேங்காய் வெங்காயம் விழுதையும் சேர்த்து நன்கு அரைத்து 5மணிநேரம் புளிக்க விடவும்.
- 3
தோசைக் கல் சூடானதும் மெல்லிய தோசையாக வார்த்து சுற்றிலும் ஆயில் அல்லது நெய்விட்டு முறுகலாக எடுக்கவும்.சுவையான சத்து மிகுந்த கார தோசை தயார். பொட்டுக்கடலை தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15440364












கமெண்ட் (2)