கார தோசை

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

magazine 6#nutrition

கார தோசை

magazine 6#nutrition

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
ஐந்து நபர்
  1. 1/2படி இட்லி அரிசி
  2. 1 கப் துவரம் பருப்பு
  3. 3/4 கப் உளுத்தம் பருப்பு
  4. 15 வர மிளகாய்
  5. 1 டீஸ்பூன் சீரகம்
  6. 1 டீஸ்பூன் மிளகு
  7. 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. 2 பெரிய வெங்காயம்
  9. 5 ஸ்பூன் துருவிய தேங்காய்
  10. 1கைப்பிடி கொத்தமல்லி தழை
  11. 1 கைப்பிடி கறிவேப்பிலை
  12. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  13. தேவையானஉப்பு
  14. தேவையானஅளவு ஆயில் அல்லது நெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    இட்லி அரிசி, துவரம் பருப்பு,உளுத்தம் பருப்பு, மூன்றும் நன்கு கழுவி தேவையான நீர் விட்டு 3 மணி நேரம் ஊறவிடவும். பெரிய வெங்காயம் நறுக்கவும்.வர மிளகாய்.தேங்காய் துருவல்.வெங்காயம், சீரகம் மிளகு, உப்பு மஞ்சள்தூள் பெருங்காயம் கறிவேப்பிலை மல்லித்தழை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

  2. 2

    கிரைண்டரில் ஊற வைத்த அரிசி பருப்பு அரைக்கவும். மிக்ஸி ஜாரில் அரைத்த தேங்காய் வெங்காயம் விழுதையும் சேர்த்து நன்கு அரைத்து 5மணிநேரம் புளிக்க விடவும்.

  3. 3

    தோசைக் கல் சூடானதும் மெல்லிய தோசையாக வார்த்து சுற்றிலும் ஆயில் அல்லது நெய்விட்டு முறுகலாக எடுக்கவும்.சுவையான சத்து மிகுந்த கார தோசை தயார். பொட்டுக்கடலை தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes