"பிரட் ஹல்வா"(BREAD HALWA RECIPE IN TAMIL)

"பிரட் ஹல்வா"(BREAD HALWA RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
பிரட் ஹல்வா செய்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்...
7பிரட் துண்டுகளை ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக கட் செய்துக் கொள்ளவும்.
- 2
அடுத்து ஒரு பாத்திரத்தை கேஸ் அடுப்பு மேல் வைக்கவும்.
தேவையான அளவு சன்பிளவர் ஆயில் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்த பிறகு கட் செய்து வைத்த பிரட் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் திருப்பி போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
வறுத்து எடுத்த பிரட் துண்டுகள் தயார்...
- 4
ஒரு பாத்திரத்தில் 2டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும்.நெய் காய்ந்த பிறகு நறுக்கி வைத்த 6முந்திரி பருப்புகள்,12காய்ந்த திராட்சைகள் போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்...
- 5
அதே பாத்திரத்தில் சிறிதளவு சன்பிளவர் ஆயில் சேர்த்துக் கொள்ளவும்.எண்ணெய் காய்ந்த பிறகு 350மில்லி பால் ஊற்றவும்,250கிராம் சீனி சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.நன்றாக கொதித்த பின் வறுத்த பிரட் துண்டுகளைச் சேர்க்கவும்.
- 6
வறுத்த பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
1/2டீஸ்பூன் ஏலக்காய் தூள்,1சிறிய டீஸ்பூன் சிவப்பு கலர் பவுடர் சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க வைக்கவும்.
- 7
அடுத்து வறுத்து வைத்த முந்திரி பருப்பு&காய்ந்த திராட்சைகளை சேர்த்துக் கிளரவும்...
பிரட் ஹல்வா செய்யும் போது கைவிடாமல் கிளரவும்...இடைப்பட்ட நேரத்தில் நெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்...
- 8
"பிரட் ஹல்வா" தயார்........
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட்