ஸ்பெஷல் ஃப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)
ஸ்பெஷல் ஃப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் கேரட் பீன்ஸ் வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
காளானை மெல்லியதாக கட் பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும் பன்னீரையும் சிறிய சிறியதாக கட் பண்ணி எடுத்து வெறும் மிளகாய்த்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும் பின் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பன்னீரை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும் பின் காளானில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து காளானை நன்றாக தண்ணீர் வற்றும் வரை நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் கேரட் பீன்ஸ் ஆகியவற்றை நன்றாக வதக்கிக்கொள்ளவும் பின் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி காளான் பன்னீர் ஆகியவற்றை போட்டு ஒரு ஸ்பூன் சோயா சாஸ் 3 ஸ்பூன் சில்லி சாஸ் ஒரு ஸ்பூன் வினிகர் ஆகியவற்றை போட்டு மிளகுத்தூள் போட்டு நன்றாக கிளறவும்
- 5
பின் வடித்து வைத்துள்ள சாதத்தை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும் பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் தூவவும் சுவையான ஸ்பெஷல் ஃப்ரைட் ரைஸ் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்