மரவள்ளிக் கிழங்கு மசாலா ரொட்டி(tapioca masala roti recipe in tamil)

மரவள்ளிக் கிழங்கு மசாலா ரொட்டி(tapioca masala roti recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இது இரண்டு முறைகளில் செய்யலாம்.
முதல் முறை:வேக வைத்த கிழங்கு மீதி இருந்தால் அதை பயன் படுத்தலாம்.
- 2
இரண்டாம் முறை:
கிழங்கை மஞ்சள்,உப்பு சேர்த்து நன்றாக குழைய வேக வைத்து எடுக்கவும்.வேக வைத்த தண்ணீரை,விரும்பினால் மாவு பிசைய பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த முறையில்,நன்கு குழைவாக வேக வைத்து எடுப்பதினால்,தண்ணீர் (அதிகம் தேவைப்படாது) கவனமாக சேர்த்து பிசைய வேண்டும்.
வேக வைத்த பதத்திற்கேற்ப1.5-2கப் மாவு தேவைப்படும்.
- 3
மாவுடன்,வேக வைத்து மசித்த கிழங்கு,மிளகாய் தூள்,உப்பு,தேங்காய் துருவல்,சீரக தூள்,நறுக்கிய வெங்காயம்,மல்லித்தழை கலந்து விட்டு பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இரண்டு முறைகளுக்கும் தனித்தனியாக படங்கள் கொடுத்துள்ளேன்.
- 4
நன்றாக ஒன்று சேர்த்து பிசைந்த பின் 15நிமிடங்கள் ஊறவிடவும்.பின் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
- 5
பிடித்த உருண்டைகளை மாவு தூவி,சப்பாத்தியாக விரிக்கவும்.
மாவு பிசையும் பொழுது,தண்ணீர் அதிகமாகி விட்டாலும் அல்லது அதிக நேரம் ஊற விட்டாலும் சப்பாத்தியாக விரிக்க வராது.
- 6
விரிக்க வரவிலையெனில்,வாழை இலையில் என்ணெய் தடவி அதில் உருண்டைகளை வைத்து கையால் விரித்து விடலாம்.
- 7
பின் தோசைக் கல் சூடானதும் எண்ணெய் விட்டு,விரித்த சப்பாத்திகளை 2புறமும் வேக விட்டு எடுக்கவும்.
- 8
அவ்வளவுதான். சுவையான மரவள்ளிக் கிழங்கு மசாலா ரொட்டி ரெடி.
இதற்கு sidish ஏதும் தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம்.சுவையாக இருக்கும். விரும்பினால் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட் (4)