அதிரசம்(athirasam recipe in tamil)

#CF2
தமிழரின் பாரம்பரிய இனிப்பு இந்த அதிரசம் ..... இதன் எளிமையான செயல்முறை-யை இந்தபதிவில் காணலாம்..
அதிரசம்(athirasam recipe in tamil)
#CF2
தமிழரின் பாரம்பரிய இனிப்பு இந்த அதிரசம் ..... இதன் எளிமையான செயல்முறை-யை இந்தபதிவில் காணலாம்..
சமையல் குறிப்புகள்
- 1
வெல்லத்தில் அளவான தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்..
- 2
இதனுடன் சுக்குப்பொடி ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கெட்டியான பாகு வந்ததும் வடிகட்டவும்.....
- 3
வெல்லப் பாகு சூடாக இருக்கும்போதே அரிசி மாவுடன் சேர்க்கவும். ஒரு கைகளால் சேர்த்து ஒரு கைகளால் அரிசி மாவினை கலக்கவும்....
- 4
வெல்லப்பாகு கலந்த அரிசி மாவினை இரண்டு நாட்கள் நன்கு மூடி...அறை வெப்பநிலையில் வைக்கவும்..
- 5
இரண்டு நாட்களுக்கு பின்பு அரிசி மாவினை நன்கு சப்பாத்தி மாவு போல பிசையவும் ஒருவேளை இது வறண்டு போய் இருந்தால்,இளம் சூடான பாகு சேர்த்து பிசையவும்.....
- 6
பின்பு சிறு உருண்டைகளாக உருட்டி, பின்னர் தட்டையாக இலையில் வைத்துத் தட்டிக்கொள்ளவும்....
- 7
இதனை இளம் சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.... 2-3 அதிரசங்களை மட்டுமே பொரித்தெடுக்கவும்.... அதிகமாக சேர்க்கும் பொழுது வேகாமல் போய்விடும்........
- 8
பொறுமையாக செய்தால்.....அருமையான தமிழரின் இனிப்பு 'அதிரசம்' தயார்......
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்