திணை கிச்சடி(thinai kicchadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும் பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
- 2
வெங்காயம் சிவக்க வறுத்த உடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்
- 3
பச்சை வாசனை போனவுடன் தக்காளி பச்சைமிளகாய் கேரட் பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும் பிறகு அரை கப் தயிர் அதனுடன் சேர்க்கவும்
- 5
பின்னர் ஒரு லிட்டர் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
பிறகு அதனுடன் திணை அரிசியை சேர்த்து வேக வைக்கவும். அளவு உப்பு சேர்த்து புதினா மல்லி இலை தூவி இறக்கவும்
- 7
சுவையான தினை அரிசி கிச்சடி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15742404




கமெண்ட்