ராகி புட்டு / கேப்பை புட்டு(ragi puttu recipe in tamil)
#CF6
ராகி
Week 6
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு ராகி மாவு, தேங்காய் பால் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தொளித்து உதிர் உதிரியாக பிரட்டி வைத்து கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் ½ அளவு தண்ணீர் நிரப்பி சூடு செய்யவும்.புட்டு குழலில் முதலில் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து பின்பு அதற்கு மேலாக ராகி மாவு கலவையை உதிரி உதிரியாக சேர்க்கவும்.பின்பு மறுபடியும் தேங்காய் துருவல் சேர்த்து புட்டு குழலை மூடிவிடவும்.
- 3
குக்கர் மூடியிருந்தது ஆவி வர ஆரம்பித்த உடன் புட்டு குழுலை அதன் மேல் வைத்து வேகவிடவும்.புட்டு குழல் மூடியிலிருந்தது ஆவி வர ஆரம்பித்ததும் புட்டு குழுலை குக்கரை விட்டு எடுத்து விடவும்.
- 4
புட்டு குழுல் அடி பாகத்தில் ஒரு துவாரம் இருக்கும். அதன் வழியாக ஒரு குச்சியை வைத்து மெதுவாக தள்ளினால் புட்டு உடையாமல் அழகாக வந்துவிடும்.
- 5
சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட இந்த ராகி புட்டு.இத்தடன் சர்க்கரை / நாட்டு சர்க்கரை/கருப்பட்டி மற்றும் வாழை பழமும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால் கூடுதல் ருசி யாக இருக்கும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (4)