காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)

காபி மைசூர்பாக் செய்வது மிகவும் சுலபம். காபி பிடிக்கும் அனைவரும் விரும்பி சுவைக்கலாம். சாக்லேட் போல் மிகவும் மிருதுவாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.
#CF8
காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)
காபி மைசூர்பாக் செய்வது மிகவும் சுலபம். காபி பிடிக்கும் அனைவரும் விரும்பி சுவைக்கலாம். சாக்லேட் போல் மிகவும் மிருதுவாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.
#CF8
சமையல் குறிப்புகள்
- 1
காபி மைசூர் பாக் செய்ய மேலே கொடுத்துள்ள பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
ஒரு சிறிய பௌலில் காபி பவுடர், கால் கப் சூடான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 3
கடலை மாவை சலித்து ஒரு பௌலில் சேர்த்து ஒரு கப் நெய் சேர்த்து, கட்டி இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
நெய், கடலை மாவு சேர்த்து கலந்த பின் முதலில் தயார் செய்து வைத்துள்ள காபி கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 5
எல்லாம் தயாராக செய்து வைத்தபின் ஒரு நாஸ்டிக் பத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சர்க்கரை, அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 6
சர்க்கரை, தண்ணீரில் கரைந்து, கொதித்து ஒரு கம்பி பாதம் வந்ததும், கரைத்து வைத்துள்ள கடலை மாவு, காபி கலவையை சேர்த்து கை விடாது கலக்கவும்.
- 7
நுரைத்து வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலந்து கொண்டே இருக்கவும்.
- 8
அவ்வப்போது நெய் சேர்த்து கலக்கவும். ஸ்டவ்வை மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்..
- 9
ஓரம் ஒட்டாமல் வரும் போது, கரண்டியில் இழுத்து பார்த்தால் இடைவெளி வரும் அப்போது இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் வைத்து நன்கு தேய்த்து விடவும்.
- 10
சூடு ஆறியவுடன் விருப்பப்படி துண்டுகள் போடவும். குறைந்தது இருப்பது நிமிடங்கள் விட்டு கட் செய்யலாம்.
- 11
தயார் செய்த காபி மைசூர்பாக்களை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 12
இப்போது மிகவும் சுவையான காபி மைசூர் பாக் சுவைக்கத் தயார்.
- 13
காபி மைசூர் பாக் எனது முதல் முயற்சி. அருமையாக வந்தது. அனைவருக்கும் பிடித்தது.
மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும், காபி, நெய் மணத்துடனும் இருந்ததால் அனைவரும் விரும்பி சுவைத்தனர்.
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட் (20)