நண்டு கிரேவி(nandu gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வட சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். சூடானதும் பட்டை கிராம்பு நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து அந்த விழுதை வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- 3
இரவு சுத்தம் செய்து வைத்துள்ள நண்டு சேர்த்து உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து பிரட்டி விடவும்..
- 4
இதில் கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 15 நிமிடம் வேக விடவும்.
- 5
நண்டு வெந்த பின் இறுதியில் மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து கறிவேப்பிலை தூவி அடுப்பை அணைக்கவும்.
- 6
சுவையான நண்டு மசாலா வின்டர் மற்றும் கிறிஸ்மஸ் சீசனுக்கு ஏற்றதாகும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15821963




கமெண்ட்