பர்கர் பன்(burger bun recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

பர்கர் பன்(burger bun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5மணி நேரம்
3பேர்
  1. 2கப் மைதா மாவு
  2. 1டேபிள் ஸ்பூன் ஈஸ்ட்
  3. 1/2கப் வெதுவெதுப்பான தண்ணீர்
  4. 1/2கப் தண்ணீர்
  5. 2டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  6. 3டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  7. 3டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை
  8. 3டேபிள் ஸ்பூன் ஆயில்
  9. 1/2ஸ்பூன் உப்பு
  10. 2ஸ்பூன் பட்டர்
  11. 2ஸ்பூன் எள்

சமையல் குறிப்புகள்

5மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

    முதலில் 1/2கப் கை பொறுக்கும் சூடு(ஆறிவிடக் கூடாது) உள்ள தண்ணீரில் ஈஸ்ட், சர்க்கரை,பால் பவுடர் கலந்து, 10-15நிமிடங்கள் மூடி வைத்து ஈஸ்ட்-ஐ அக்டிவேட் செய்ய வேண்டும்.

  2. 2

    சிறிய கடாயில் 2ஸ்பூன் மைதாமாவு மற்றும் 1/2கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து,அடுப்பில்,சிறு தீயில் வைத்து 'பேஸ்ட்'பதத்திற்கு மாறும் வரை கைவிடாமல் கலந்து,ஆற வைக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில்,உப்பு சேர்த்து சலித்த மைதா மாவு, அதனுடன் மேலே செய்த மைதா மாவு பேஸ்ட் மற்றும் ஈஸ்ட் கலவை சேர்த்து நன்றாக கிளறவும்.கைகளில் நன்றாக ஒட்டும்.

  4. 4

    பின்,ஆயில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும்.

  5. 5

    மாவை பிசைவதற்கு வசதியான இடத்திற்கு மாற்றி,20-30நிமிடங்கள் நன்றாக இழுத்துப் பிசையவும்.

  6. 6

    பிசைந்த மாவில் 2சொட்டு ஆயில், மற்றும் பாத்திரத்தில் ஆயில் தடவி,வெதுவெதுப்பான இடத்தில் மூடி போட்டு 1-1.30 மணி நேரம் ஊற வைக்கவும்.1.30 மணி நேரத்திற்குப் பிறகு மாவு இருமடங்காக வந்திருக்கும்.

  7. 7

    சிறிதளவு மாவு தூவி 1நிமிடம் பிசைந்து,அதை தேவையான எண்ணிக்கையில் பிரித்து,மேலும் சிறிதளவு மாவு தூவி பரோட்டாக்கு உருண்டை பிடிப்பது போல் கீறல்கள் இல்லாமல் கைகளால் அழுத்தி மேலிருந்து மாவை,கீழே கொண்டு வந்து,கீழே கீறல்கள் தெரியாத அளவு உருண்டைகலாக்கவும்.

  8. 8

    தட்டில் எண்ணெய் தடவி பட்டர் பேப்பர் போட்டு அதில்,பிடித்த உருண்டைகளை இடம் விட்டு வைத்து,அதன் மேல் ஈரப்பதம் உள்ள துணியை விரித்து 30நிமிடங்கள் ஊற விடவும்.

  9. 9

    துணியை எடுத்து விட்டு,உப்பிய உருண்டைகள் மேல்,தண்ணீர் தடவி,அதன் மேல் எள் தூவவும்.

  10. 10

    இன்னும் சிறிதளவு உப்பி வந்திருக்கும்.இப்பொழுது, அடிகனமான பாத்திரத்தில் மண் போட்டு,ஸ்டாண்ட் வைத்து,10நிமிடங்கள் சூடு செய்து,பின் ஸ்டாண்ட்-ல் தட்டை வைத்து சிறு தீக்கும் அதிகமாக வைத்து மூடி போட்டு 40-50 நிமிடங்கள் வேக விடவும்.

  11. 11

    வெந்த பன் மேல்,உருக்கிய வெண்ணெய் தடவி,ஈரத்துணியால் ஆறும் வரை மூடி விடவும்.

  12. 12

    அவ்வளவுதான். புசு புசு வென,சாப்ட் ஆன,பர்கர் பன் ரெடி.

    ஜாம் தடவி சாப்பிட அல்லது காய்கறி மற்றும் கட்லெட் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

    முதல் நாளை விட,இரண்டாம் நாள் மிகவும் சாப்ட் ஆக,சுவையாக இருந்தது.குழந்தை முதல் பெரியவர்கள் விரும்பி சுவைத்தார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes