சிக்கன் பாலான்டி(chicken palaandi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு முழு கோழியை உப்பு, இஞ்சி பூண்டு விழுது,கறி மசாலா தூள் சேர்த்து பிரட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு மற்றொரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.பின்பு பஜ்ஜி மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
பின்பு நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும்.தக்காளி பச்சை வாடை நீங்கியதும் பொரித்த கோழியை சிறிய துண்டுகளாக பிய்த்து போடவும்.
- 3
பின்பு அத்துடன் 2 முட்டைகள் அடித்து சேர்க்கவும்.இத்துடன் 1 தேக்கரண்டி கீரை பொடியும் சேர்க்கவும்.½ லிட்டர் பால் சேர்த்து அது திரிந்தார் போல் வந்ததும் ஒரு முறை கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
- 4
சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் இந்த சிக்கன் பாலான்டி.இது ஒரு கேரளா மனிதர் மிஞ்சிய பொரித்த கோழியை வைத்து செய்து பார்த்து பிரபலமான சிக்கன் கறி. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள் இந்த சிக்கன் பாலாண்டியை.
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்