பச்சை மிளகு குழம்பு(pepper graavy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சீரகம், சோம்பு,கசகசா சேர்த்து வறுக்கவும்.
- 2
பாதி வறுபட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு சிவக்க வறுக்கவு, ஆறியபின் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
- 3
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
- 4
பின் நறுக்கிய சின்னவெங்காயம், பூண்டு பச்சைமிளகு சேர்க்கவும்.
- 5
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா, வற்றல் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- 6
பின் புளிகரைசல் சேர்த்து நன்கு கொதித்ததும் சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்
- 7
மிகவும் ருசியான மிளகு குழம்பு தயார்
ருசியாக இருப்பது மட்டுமின்றி, ஜலதோஷம், இருமலுக்கு அருமருந்து.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15866283



கமெண்ட்