கம்பு சேமியா காரத் தாளிப்பு.(kambu semiya recipe in tamil)

கம்பு சேமியா காரத் தாளிப்பு.(kambu semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு இட்லி பானையை அடுப்பில் வைத்து சூடாக்கவும் ஒரு கடாயில் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து அதில் எடுத்து வைத்துள்ள கம்பு சேமியாவை முக்கிய ஒரு நிமிடம் அப்படியே ஊற வைக்கவும்
- 2
ஊற வைத்த சேமியாவை வடிகட்டி வைத்து வடித்து நாம் அடுப்பில் வைத்துள்ள இட்லி பானையில் போட்டு
- 3
மூடி வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
- 4
இப்போது கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் அதனுடன் நெய் சேர்க்கவும் தேங்காய் நெய்யும் சூடான பிறகு எடுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையை வறுத்து எடுக்கவும்
- 5
அதே கடாயில் கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும்அதனுடன் வெங்காயம் சேர்க்கவும்
- 6
வெங்காயம் சேர்த்த பிறகு உடன் பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 7
கூடவே இஞ்சி சேர்க்கவும் நன்கு கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 8
கூடவே மல்லி இலை சேர்த்து நன்கு கிளறிவிடவும் ஆவியில் வேகவைத்து எடுத்து வைத்துள்ள சேமியாவை தாளித்த மசாலாவில் சேர்க்கவும்
- 9
இப்போது சேமியாவை சேர்த்தவுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்க்கவும் அதனுடன் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்க்கவும்
- 10
இப்போது எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி விடவும் தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து கொள்ளலாம் இப்போது சுவையான கம்பு சேமியா காரத் தாளிப்பு தயார் சாப்பிடலாம் வாங்க..
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

































கமெண்ட்