சீரக சம்பா பச்சரிசி குருணை வெண்பொங்கல்(venpongal recipe in tamil)

ஊர்ல எங்க அண்ணி வீட்டுக்கு பக்கதுல, விவசாயிங்க சீரக சம்பா குருணை வழக்கத்த விட கொஞ்சம் குறைஞ்ச விலைக்கு கொடுப்பாங்க... நம்ம, அத வச்சு வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், தேங்காய் பால் சாதம், புலாவ் மாதிரி நிறைய செய்யலாம்.. சுவை அபாரமா இருக்கும்.. இன்னைக்கு நான் மண்சட்டில எப்படி பண்றதுன்னு காட்டுறேன்... நீங்க குக்கர்லயும் செஞ்சுக்கலாம்..

சமையல் குறிப்புகள்
- 1
குருணையை களைஞ்சு 15 நிமிசம் ஊற வச்சுக்கோங்க... தண்ணீர மண்சட்டில ஊத்தி மூடி போட்டு அடுப்புல வைங்க.. இந்த மாதிரி முட்டை முட்டையா வந்ததும், குருணை, பாசிப்பருப்பு, நெய் உப்பு சேர்த்து கலந்து விட்டு மூடனும்.
- 2
இடையில திறந்து கலந்து விட்டுக்கோங்க.. தனியா நெய்ல முந்திரிய வறுத்து வச்சுக்கோங்க... பக்குவமா வெந்ததும், முந்திரிய தூவனும்.. பிறகு தனி கடாய்ல நெய் ஊத்தி மிளகு சீரகம் பொரிய விட்டு பொங்கல் மேல போடனும்..
- 3
கிளறி மூடி வச்சு, பறிமாறினா சுவையான பச்சரிசி குருணை வெண்பொங்கல் தயார்... சீரக சம்பா அரிசி மணமும், நெய் மணமும் சேர்ந்து தனி சுவையா இருக்கும்... பச்சரிசி செமிக்க நெய் சேர்க்குறோம்.. நிறைய சேர்த்தா தப்பில்லை.. உளுந்த வடை இல்லாம போச்சுங்க இன்னைக்கு😒😒
ஆனாலும் சாம்பார் சட்னியோட ஆனந்தமா சாப்டேன்..
ஆனந்தமா சாப்பிடுங்க...
ஆரோக்கியமாக இருங்க..
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)