பச்சை மொச்சை வறுவல்(pachai mochai varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மொச்சைக்காய் உரித்து, மொச்சைபயிரை வெளியே எடுத்து நன்கு கழுவி தண்ணீர் வடித்து எடுக்கவும்
- 2
குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் 3 டேபிள்ஸ்பூன் கடலெண்ணெய் விட்டு பட்டை, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 3
பிறகு பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
இதனுடன் பயிர் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கி விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 5
பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள் சேர்த்து வதக்கி விடவும்
- 6
பிறகு சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 7
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலை சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைக்கவும். இதனையும் பயறுடன் கலந்து நன்கு கிளறவும்
- 8
அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 (அ) 4 விசில் விடவும்
- 9
பிறகு குக்கரை திறந்து சிறிது வற்றி வரும் வரை 2 நிமிடங்கள் நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes































கமெண்ட்