சிக்கன் சமோசா (Chicken samosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவில் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவைப் பிசையவும்.
- 2
மாவை 18 பங்குகளாக பிரிக்கவும். மூன்று பங்கை சின்ன ரொட்டி போல் உருட்டி, ஒரு ரொட்டி மேல் எண்ணெய் தடவி மற்றும் மைதா மாவை தூவி இன்னொரு ரொட்டியை வைக்கவும். மறுபடியும் அந்த ரோட்டின் மேல் எண்ணெய் தடவி மற்றும் மாவை தூவி இன்னொரு ரொட்டியை வைக்கவும். இப்போது மூன்றையும் சேர்த்து பெரிய ரொட்டி போல் உருட்டவும். இப்போது அதை தவாவில் போட்டு இரண்டு பக்கமும் 30 நொடிகள் வைத்து அமைத்துக் கொள்ளுங்கள்.
- 3
இப்போது அந்த மூன்று தொட்டிகளை பிரியுங்கள். இருக்கிற எல்லா ரொட்டியையும் இதைப்போல் சமைத்த பிரித்துக் கொள்ளுங்கள். எல்லா ரொட்டியையும் ஒன்றாக வைத்து அதை நடுவிலிருந்து மற்றும் இரண்டு சைடிலும் கட் செய்யுங்கள் (போட்டோவில் காட்டியிருக்கும் போல்).
- 4
சிக்கனை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதில் தயிர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
- 5
3 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சேர்க்கலாம் நான் இங்கே பட்டாணி சேர்த்து இருக்கிறேன்.
- 6
இப்போது மிக்ஸியில் அரைத்த சிக்கன் மற்றும் தயிரை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் வதக்கிய பின் அதில் மிளகாய் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மிளகு தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து சிக்கன் நன்றாக சமைக்கும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
- 7
2 டேபிள் ஸ்பூன் மைதா மாவில் 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளுங்கள், பேஸ்ட் தயார். சமோசா செய்து இருக்கும்போது இது முடிந்து விட்டால் இன்னொரு முறை செய்து கொள்ளுங்கள்.
- 8
சமோசா பட்டியை போட்டோவில் காட்டு இருக்கும் போல் மடித்துக்கொள்ளுங்கள்.
- 9
இப்போது அதற்குள் சிக்கன் ஸ்டஃப்ஃபிங் வைத்து ஒட்டுவதற்கு பேஸ்ட் தடவி முக்கோண வடிவத்தில் மடித்துக் கொள்ளுங்கள்.
- 10
இப்போது சமோசாவை எண்ணெயில் பொறுத்துக்கொள்ளுங்கள். சமோசா தயார். சைடில் கட் செய்த சமோசா பட்டியையும் வறுத்துக்கொள்ளுங்கள் அதையும் ரசித்து சாப்பிடுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes































கமெண்ட்