ஹார்ட் வாழைப்பழ போளி(heart shape banana poli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு, நெய் 2 டேபிள் ஸ்பூன், வெல்ல பாகு 2 டேபிள் ஸ்பூன், 1 பின்ச் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து தனியாக வைக்கவும்.
- 2
மிக்சியில் முந்திரி, பாதாம், ஏலக்காய் சேர்த்து பொடித்து தனியாக வைக்கவும். பின் வாழைப்பழத்தையும் அரைக்கவும்.
- 3
ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து ரவையை வறுக்கவும். பின் அதில் அரைத்து வைத்துள்ள பழத்தை சேர்த்து நன்கு கிளறவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
கலவை நன்கு வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி பாதாம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
- 5
மாவை சிறு சிறு உருண்டை பிடிக்கவும். பின் சப்பாத்தி போல் தேய்த்து நடுவில் வாழைப்பழ பூரணத்தை வைத்து தேய்த்து எடுக்கவும். அதை ஹார்ட் வடிவில் கட் செய்யவும்.
- 6
ஒரு தோசைக் கல்லில் சப்பாத்தி போல் போட்டு நெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான ஹார்ட் வாழைப்பழ போளி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்