குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)

#made3
#காலை உணவு, #weight loss
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3
குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#made3
#காலை உணவு, #weight loss
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
நீரில் அரிசி தனியாகவும், உளுந்து வெந்தயம் தனியாகவும் 6 மணி நேரமாவது ஊறவைக்கவும். வடித்து நீர் சேர்த்து முதலில் உளுந்து வெந்தயம் கிரைண்டரில் போட்டு மழ மழ வென்று அறைக்கவும். மாவு சாஃப்ட் சில்கி ஆக இருக்க வேண்டும். பின் அரிசி நீர் சேர்த்து அறைக்க. இட்லி மாவு சரியான பதத்திற்கு இருக்க வேண்டும். மிகவும் கெட்டியாக இருக்கக்கூடாது. ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க. அன்றே செய்ய ஈஸ்ட் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும்,4 மணி நேரத்தில் பொங்கிவிடும். பொங்கிய பின் கிளறாதீர்கள்.
- 3
இட்லி தட்டில் உள்ள குழிகளில் எண்ணை தடவி மாவு ஊற்றுக, முழக்க நிறப்பாதீர்கள்
இட்லி குக்கரில் போதுமான நீர் ஊற்றி அடுப்பின் மேல் ஹை வ்லேமில் (high flame) வைக்க. நீர் கொதித்ததும் இட்லி ஸ்டண்ட் அதில் வைத்து மூடுக. வெந்த வாசனை வந்ததும் அடுப்பை அணைக்க. சில நிமிடங்கள் கழித்து திறந்து குச்சியால் இட்லியை குதிப்பார்க்க. நன்றாக வெந்திருந்தால் குச்சி சுதமமாக இருக்கும். ஆறின பின் இட்லிகளை வேறொரு பாத்திரத்தில் போடுக. 16 இட்லிகள் செய்தேன்.
சாஃப்ட் ஆன ருசியான சத்தான இட்லிகள் ருசிக்க தயார். - 4
எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. நான் செய்த மிளகாய் பொடி பருப்புகள், வால்நட், எள், பிளாக்ஸ் சீட், மிளகு, மிளகாய் பொடி கலந்தது. எனக்கு இட்லி கூட மிளகா பொடி சேர்த்து சாப்பிட பிடிக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
- சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
- தலைப்பு : பொடி இட்லி தக்காளி சட்னி(podi idli tomato chutney recipe in tamil)
- * பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
- தலைப்பு : நன்னாரி சர்பத்(nannari sarbath recipe in tamil)
- மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)














கமெண்ட் (8)