இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத ஹோட்டல் சாம்பார்(no dal sambar recipe in tamil)

#wdy குறைவான நேரத்தில் ருசியான ஹோட்டல் கடைகளில் கிடைக்கக்கூடிய சாம்பாரை தயாரித்து விடலாம்
இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத ஹோட்டல் சாம்பார்(no dal sambar recipe in tamil)
#wdy குறைவான நேரத்தில் ருசியான ஹோட்டல் கடைகளில் கிடைக்கக்கூடிய சாம்பாரை தயாரித்து விடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரை சிறிய வெங்காயம் 2 பெரிய வெங்காயம் 2 தக்காளி 2 பல் பூண்டு பச்சை மிளகாய் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து ஒரு மடங்குக்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் விட்டு நான்கைந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு குக்கரை திறந்து வெங்காயம் தக்காளி நன்கு வெந்த பிறகு அந்த மத்தால் நன்கு மசித்து விடவேண்டும்
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கி நாம் தயாரித்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி விலை இத்துடன் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் விட வேண்டும் - 3
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கால் டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்
- 4
நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒரு சின்ன பாத்திரத்தில் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து நாம் தயாரித்து வைத்துள்ள சாம்பாரில் ஊற்றவேண்டும் தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் சாம்பார் சிறிது கெட்டியானதும் கடைசியாக மல்லித்தழை தூவி இறக்க வேண்டும்
சுவையான ஹோட்டல் ஸ்டைல் பருப்பு இல்லாத சாம்பார் தயாராகிவிட்டது
நீங்களும் இதை செய்து ருசித்துப்பாருங்கள்
Keywords
Similar Recipes
More Recipes
- பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)
- கிரிஸ்பி ஸ்வீட் கார்ன்(crispy sweet corn recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி(hotel style potato gravy recipe in tamil)
- மாப்பிள்ளை சம்பா அரிசி சாம்பார் சாதம்(mappillai samba sambar sadam recipe in tamil)
- பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)








கமெண்ட்