மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது....

மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)

#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

12-15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 250 gm- மஷ்ரூம்
  2. 2டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  3. 1- டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  4. 1- டேபிள் ஸ்பூன் மைதா
  5. 1-டேபிள்ஸ்பூன் சோள மாவு
  6. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1 ஸ்பூன் மிளகு தூள்
  9. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 1/2 ஸ்பூன் கரம் மசால
  11. 1ஸ்பூன் எலுமிச்சை சாறு
  12. தேவைக்குஉப்பு, கறிவேப்பிலை
  13. தேவைக்குபொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

12-15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மஷ்ரூமை நன்றாக வாஷ் செய்து நீட்டமாக வெட்டி வைத்துக்கவும்

  2. 2

    ஒரு பவுலில் கடலைமாவு, மைதா, அரிசி மாவு, சோளமாவை ஓன்று சேர நன்கு கலந்துக்கவும்

  3. 3

    அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணி தெளித்து பிசைந்துக்கவும்

  4. 4

    கடைசிசியாக எலுமிச்சை சாறு,பிழிந்து விட்டு கருவேப்பிலை பிச்சி போட்டு எல்லாம் சேர்த்து நன்றாக பிசைந்து 5 நிமிடம் மூடி வைத்து விடவும்

  5. 5

    ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான் சூட்டில் வைத்து ஒவொரு மஷ்ரூமமாக எடுத்து மாவில் முக்கி எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்

  6. 6

    சுவை மிக்க மொறு மொறு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் 65 தயார்... டீ, காபி யுடன் சேர்த்து சுவைக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes