பானி பூரி(pani puri recipe in tamil)

#ss இப்பொழுது,இந்த ரோட் கடை பானி பூரி தான் trending. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை.
பானி பூரி(pani puri recipe in tamil)
#ss இப்பொழுது,இந்த ரோட் கடை பானி பூரி தான் trending. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமை.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பானி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சி ஜாரில் சேர்த்து,அதனுடன் 1/4கப் தண்ணீர் விட்டு அரைக்கவும்.கொர கொரப்பாகத்தான் இருக்கும்.
- 3
அரைத்தவிழுதுடன் 2கப்(தேவையான) அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு வடிகட்டவும்.
வடிகட்டிய கலவையில்,1/2கப் புளிகரைசல் சேர்க்கவும்.
- 4
இதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள்,சீரக தூள்,கரம் மசாலா,மல்லித்தூள்,சாட் மசாலா,உப்பு சேர்த்து கலந்து விடவும்.
நம் பானி தண்ணீர் ரெடி.
- 5
மசாலா செய்ய:
வானலிலியில் எண்ணெய் ஊற்றி,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி,வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். - 6
பின் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து விடவும்.பின் மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 7
இந்த கலவையில் மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா,மிளகு தூள்,சீரக தூள் சேர்த்து
பசைவாசம் போக கலந்து விடவும். - 8
அடிப்பிடிக்கமல் இருக்க,இதனுடன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து, 1கொதி விட்டு,மல்லி தழை சேர்த்து இறக்கவும்.
- 9
இனி,பூரியை பொரித்துக் கொள்ளலாம்.
பொரித்த பூரியை நடுவில் துளையிட்டு,அதில் கிழங்கு மசாலா வைக்கவும்.
- 10
பின் அதனுடன் 2ஸ்பூன் அளவு பானி ஊற்றி பரிமாறலாம்.
- 11
அவ்வளவுதான். சுவையான பானி பூரி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட் (10)